முகப்பு
தமிழ்நாடு

இரவில் 31 மாவட்டங்களுக்கு மழை! சென்னைக்கு?

இரவு 10 மணி வரை 31 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.

Updated On : 18 மே, 2025 at 7:36 PM
கோப்புப் படம்
பகிர்:
Updated On : 18 மே, 2025 at 7:35 PM

தமிழகத்தில் இரவு 10 மணி வரை 31 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

''தமிழ்நாட்டில் இரவு 10 மணி வரை திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை மற்றும் நாகையில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

Advertisement

இதேபோன்று, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம், தென்காசி மற்றும் தேனி மாவட்டங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புண்டு'' என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.