தமிழ்நாடு

காட்பாடியில் அரசுப் பேருந்து - ஆட்டோ மோதி விபத்து: ஒருவர் பலி!

அரசுப் பேருந்து - ஆட்டோ நேருக்கு நேர் விபத்து தொடர்பாக...

DIN

காட்பாடியில் அரசுப் பேருந்தும் ஆட்டோவும் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் பலியானார்.

பெங்களூருவைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சுந்தரவாசன்(69), இவரது மனைவி சுமதி. இவர்கள் இருவரும் ராணிப்பேட்டையில் உள்ள தங்களது உறவினரை சந்தித்துவிட்டு மீண்டும் சொந்த ஊரான பெங்களூருக்கு செல்ல பழைய காட்பாடியை சேர்ந்த விவேகானந்தன் என்பவரின் ஆட்டோவில் காட்பாடி ரயில் நிலையத்திற்குச் சென்றுள்ளனர்.

அப்போது காட்பாடி தாராபடவேடு வி.ஏ.ஓ. அலுவலகம் அருகில் வேலூரை நோக்கி சென்று கொண்டிருந்தபோது அரசுப் பேருந்தும் ஆட்டோவும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில் சுந்தரவாசன் சம்பவ இடத்திலேயே பலியானார். மனைவி சுமதி மற்றும் ஆட்டோ ஓட்டுநர் தூக்கிவீசப்பட்டனர்.

சம்பவ இடத்திற்கு வந்த காட்பாடி காவல் துறையினர் இருவரையும் மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.

மேலும் இறந்த சுத்தரவாசன் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து காட்பாடி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிக்க: கன்னடத்தில் பேச மறுத்த எஸ்பிஐ மேலாளர்! முதல்வர் கண்டனம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேமுதிக அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

அரசன் புரோமோ தேதி!

தில்லி: முந்திரி திருட்டு வழக்கில் 4 பேர் கைது, 440 கிலோ மீட்பு

கனரா வங்கியில் பட்டதாரிகளுக்கு உதவித்தொகையுடன் தொழில்பழகுநர் பயிற்சி!

அக். 16 - 18ல் வடகிழக்கு பருவமழை தொடங்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம்

SCROLL FOR NEXT