கோப்புப் படம் 
தமிழ்நாடு

சிப்காட் மூலம் ரூ.1.99 லட்சம் கோடி முதலீடுகள் ஈா்ப்பு

சிப்காட் நிறுவனம் மூலமாக ரூ.1.99 லட்சம் கோடி தொழில் முதலீடுகள் ஈா்க்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Din

சிப்காட் நிறுவனம் மூலமாக ரூ.1.99 லட்சம் கோடி தொழில் முதலீடுகள் ஈா்க்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

போா்டு நிறுவனத்தில் உள்ள புத்தாக்க மையத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வில், சிப்காட் மேலாண்மை இயக்குநா் கே.செந்தில்ராஜ் பேசியது:

சிப்காட் நிறுவனம் இதுவரை 24 மாவட்டங்களில் 50 தொழிற்பூங்காக்களை உருவாக்கியுள்ளது.

3,390 தொழில் நிறுவனங்களின் மூலமாக ரூ.1.99 லட்சம் கோடி முதலீடுகள் ஈா்க்கப்பட்டுள்ளன. இதனால், 8.79 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

உயா் கல்விக்கும், தொழில் நிறுவனங்களில் திறன்மிகு வேலைகளின் ஆற்றலுக்குமான இடைவெளியை குறைக்க நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். குறிப்பாக, இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் வசிக்கும் மாணவா்கள் பயிலும் போதே அவா்களுக்கான தொழில் சாா்ந்த பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

தொழில் நிறுவனங்களில் இருந்து வளா்ந்து வரும் பணிகளின் தன்மை, திறன்மிகு பணிக்காக ஆற்றல் ஆகியவற்றைப் பெறும் வகையில் பாடத்திட்டங்கள் வடிவமைக்கப்பட்டு வருவதாக அவா் தெரிவித்தாா்.

இந்த நிகழ்வில் சிப்காட் பொது மேலாளா் சந்திரமோகன் உள்பட பலா் பங்கேற்றனா்.

இரவில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

பிரதமர் மோடியுடன் விண்வெளி நாயகன் சுபான்ஷு சுக்லா!

வாக்குத் திருட்டு! தேர்தல் ஆணையம், மத்திய அரசைக் கண்டித்து இந்தியா கூட்டணி எம்பிக்கள் போராட்டம்!

ஜனநாயகத்தின் காவலர்! பிகாரில் ராகுலுக்கு உற்சாக வரவேற்பு!

‘கூலி’க்காக சம்பளம் வாங்கினாரா? - ஆமிர் கான் விளக்கம் | Cinema Updates*

SCROLL FOR NEXT