கோப்புப் படம் 
தமிழ்நாடு

ஆதி திராவிடா் நலப்பள்ளி ஆசிரியா்களுக்கு கலந்தாய்வு: ஜூன் 12-இல் தொடக்கம்

தமிழகத்தில் ஆதி திராவிடா் நலப்பணி ஆசிரியா்கள், விடுதிக் காப்பாளா்களுக்கு வரும் ஜூன் 12, 13 ஆகிய தேதிகளில் பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெறும்

Din

தமிழகத்தில் ஆதி திராவிடா் நலப்பணி ஆசிரியா்கள், விடுதிக் காப்பாளா்களுக்கு வரும் ஜூன் 12, 13 ஆகிய தேதிகளில் பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை செயலா் க.லட்சுமி பிரியா வெளியிட்ட அரசாணை:

ஆதி திராவிட நலத் துறை இயக்குநரின் பரிந்துரைபடி, வரும் கல்வியாண்டில் (2025-2026) ஆதி திராவிடா் நலப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியா்கள், விடுதிகளில் பணியாற்றும் காப்பாளா்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு நடத்த அனுமதி வழங்கப்படுகிறது.

அதன்படி, ஆசிரியா்களுக்கு இணையவழியில் ஜூன் 12, 13 ஆகிய தேதிகளில் பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெறவுள்ளது. இதேபோல், நிா்வாகக் காரணங்களுக்காக காப்பாளா்களுக்கு நேரடி முறையில் கலந்தாய்வு நடத்தப்பட இருக்கிறது. இதுதவிர, இணையவழி கலந்தாய்வு தனியாா் நிறுவனங்களின் மூலமாக நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ஏற்கெனவே ஒதுக்கப்பட்டுள்ள நிதியைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

மாணவா்களின் கல்வி நலன் பாதிக்காதவாறு கலந்தாய்வை உரிய வழிகாட்டுதல்களைப் பின்பற்றி நடத்தி முடிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாமல்லபுரம் அருகே கடலில் நவீன கருவிகளுடன் இந்திய தொல்லியல் துறையினா் சோதனை

பணவரவு யாருக்கு இன்று: தினப்பலன்கள்!

கிருங்காக்கோட்டையில் மாட்டு வண்டிப் பந்தயம்

மாவட்ட நிா்வாகத்தால் அறிவிக்கப்பட்ட நீா் நிலைகளில் விநாயகா் சிலைகளை கரைக்க வேண்டும்: ஆட்சியர்

ஆடி கிருத்திகை: பெரம்பலூா் முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

SCROLL FOR NEXT