அமைச்சர் மா. சுப்பிரமணியன் கோப்புப்படம்
தமிழ்நாடு

மா. சுப்பிரமணியனுக்கு எதிரான வழக்கு வேறு நீதிபதி அமர்வுக்கு மாற்றம்!

அமைச்சர் மா. சுப்பிரமணியனுக்கு எதிரான நில மோசடி வழக்கு பற்றி...

DIN

அமைச்சர் மா. சுப்பிரமணியனுக்கு எதிரான நில மோசடி வழக்கு சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் வேறு நீதிபதி அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.

அமைச்சர் மா. சுப்பிரமணியன் கடந்த 2006-11 காலகட்டத்தில் சென்னை மேயராக இருந்தபோது தொழிலாளருக்கு ஒதுக்கப்பட்ட சிட்கோ நிலத்தை தனது மனைவி பெயரில் பதிவு செய்ததாக தொடரப்பட்ட வழக்கு, எம்பி, எம்எல்ஏக்கள் மீதான புகார்களை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது.

இதுதொடர்பாக மா. சுப்பிரமணியன் மேல்முறையீடு செய்த மனுவை, சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மே மாதம் தொடக்கத்தில் நடைபெற்ற இந்த விசாரணையில் மே 23 ஆம் தேதி அமைச்சர் மா. சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி நேரில் ஆஜராக வேண்டும் என்று சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வரவிருந்த நிலையில், வேறு நீதிபதி அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.

கூடுதல் சிறப்பு நீதிமன்ற நீதிபதி பிரபாகரன் என்பவர் விசாரித்த நிலையில், தற்போது நீதிபதி வேங்கடவரதன் அமர்வுக்கு வழக்கு மாற்றப்பட்டுள்ளது.

இதனால் குற்றச்சாட்டு பதிவு நடைமுறையுடன் வழக்கு விசாரணை வருகிற ஜூன் 17 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் மா. சுப்பிரமணியன் அமெரிக்கா சென்றுள்ளதால் வழக்கின் விசாரணையை ஒத்திவைக்க அவரது தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கனமழை, வெள்ளத்தில் தத்தளிக்கும் ஜம்மு - காஷ்மீர்: நிலச்சரிவில் சிக்கி 30 பேர் பலி!

பக்தியும் நம்பிக்கையும் நிறைந்த நாளில் ஐஸ்வரியத்தை வழங்கட்டும்! - பிரதமர் மோடி

நல்ல நாள் இன்று: தினப்பலன்கள்!

இன்றுமுதல் 50% வரி! டிரம்ப்பின் அழைப்பை 4 முறை மறுத்த பிரதமர் மோடி?

கோவாவில் அக்டோபா் - நவம்பரில் ஃபிடே உலகக் கோப்பை செஸ் போட்டி

SCROLL FOR NEXT