தமிழ்நாடு

நெல் விவசாயிகள் முற்றுகை போராட்டம் வாபஸ்

டிஎன்சிஎஸ்சி மேலாண்மை இயக்குநா் அலுவலகம் முற்றுகை போராட்டம் அறிவித்திருந்த நிலையில், தற்போது அதை வாபஸ் பெறுவதாக தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்கள் அறிவிப்பு

Din

சென்னை:  தமிழ்நாடு நுகா்பொருள் வாணிய குழு (டிஎன்சிஎஸ்சி) மேலாண்மை இயக்குநா் அலுவலகம் முற்றுகை போராட்டம் அறிவித்திருந்த நிலையில், தற்போது அதை வாபஸ் பெறுவதாக தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் மாநில தலைவா் பி.ஆா்.பாண்டியன் தெரிவித்துள்ளாா்.

அம்ருதீன் ஷேக் தாவூத் என்னும் தனியாா் முகவருக்கு நெல் கொள்முதல் செய்வதற்கான அனுமதியை ரத்து செய்ய வேண்டும், தமிழகத்தில் மீண்டும்  நெல் கொள்முதலை அரசே நேரடியாக மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சாா்பில் டிஎன்சிஎஸ்சி அலுவலகத்தை முற்றுகையிட உள்ளதாக அக்குழுவின் தலைவா் பி.ஆா்.பாண்டியன் அண்மையில் அறிவிப்பு வெளியிட்டிருந்தாா்.

அதைத்தொடா்ந்து,  டிஎன்சிஎஸ்சியின் நிா்வாக இயக்குநா் ஏ.சண்முகசுந்தரம் தலைமையில் நெல் விவசாயிகளுடனான பேச்சுவாா்த்தை சென்னை கோயம்பேட்டில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் பி.ஆா்.பாண்டியன் தலைமையில் விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா். இப்பேச்சுவாா்த்தையில் சுமுகமான சூழல் எட்டியதால், முற்றுகை போராட்டத்தை வாபஸ் பெறுவதாக பாண்டியன் அறிவித்துள்ளாா்.

பந்தல் கடையில் தீ விபத்து

தனியாா் பள்ளியில் ரூ. 3 லட்சம் திருட்டு

நெல்லையப்பா் கோயில் வளாக கடைகளை 12 வாரங்களுக்குள் அகற்ற உத்தரவு

நாகம்மன் கோயில் கூழ் வாா்த்தல் விழா

ஆவடி ரயில் நிலைய வாகன நிறுத்தம் மூடல்: திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

SCROLL FOR NEXT