குற்றவாளி ஞானசேகரன் 
தமிழ்நாடு

தண்டனை விவரம் வெளியான பிறகே அடுத்தகட்ட முடிவு: ஞானசேகரன் தரப்பு வழக்குரைஞர்

தண்டனை விவரம் வெளியான பிறகே அடுத்தகட்ட முடிவு எடுக்கப்படும் என ஞானசேகரன் தரப்பு வழக்குரைஞர் தெரிவித்துள்ளார்.

DIN

சென்னை: குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டிருக்கும் ஞானசேகரனுக்கான தண்டனை விவரம் வெளியான பிறகே அடுத்தகட்ட முடிவு எடுக்கப்படும் என ஞானசேகரன் தரப்பு வழக்குரைஞர் ஜி.பி. கோதண்டராமன் தெரிவித்துள்ளார்.

ஞானசேகரன் தரப்பு வழக்குரைஞர் கோதண்டராமன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, இந்த வழக்கில் 28 சாட்சிகளை விசாரணை செய்து சாட்சிகள் அனைத்தையும் குறுக்கு விசாரணை நடைபெற்றது. அதன் பிறகு எதிர்வாதம் எல்லாம் முடிந்து இன்று தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இன்று பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பில் எதிரி ஞானசேகரன் மீது சுமத்தப்பட்ட 11 குற்றச்சாட்டுகள் நிரூபணம் செய்யப்பட்டதாகக் கூறி அவரை குற்றவாளி என நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.

தண்டனை விபரங்களை திங்கட்கிழமை ஜூன் 2 ஆம் தேதி அறிவிப்பதாக நீதிமன்றம் சொல்லியுள்ளது. தண்டனை விவரம் தெரிந்த பிறகுதான் அடுத்த கட்ட நடவடிக்கையாக என்ன செய்ய முடியும் என்பது குறித்து யோசிப்போம். மேல்முறையீடு போவது குறித்து முடிவெடுக்கப்படும்.

ஞானசேகருக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம். குற்றச்சாட்டப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபணம் செய்யப்பட்டுள்ளதால் அவர் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கைப் பொறுத்தளவில் ஞானசேகர் மட்டும் தான் குற்றவாளி என காட்டப்பட்டுள்ளது. வேறு யாரேனும் குற்றவாளி இருக்கிறாரா என்பதை போலீஸ் தரப்போ அல்லது நீதிமன்றமோ சுட்டிக்காட்டவில்லை. நீதிமன்றத்தால் 11 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றவாளி என அறிவிக்கப்பட்டு தண்டனை விவரம் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல்முறையீடு செய்வதற்கான சாத்தியக்கூறு என்ன இருக்கும் என்பதை பார்த்து மேல்முறையீடு செய்யலாமா வேண்டாமா என யோசிப்போம்!

அரசு எங்களுக்கு இதைச் சொல்லி உள்ளது. நீதிமன்றம் சொல்லி உள்ளதால் நாங்கள் இதை தலையாய கடமையாக எடுத்துக் கொண்டு நேர்மையாக நடத்தி உள்ளோம் என செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாசுதேவநல்லூா் அருகே தையல் தொழிலாளி தற்கொலை

மினி லாரியில் கொண்டு சென்ற வைக்கோல் கட்டுகள் தீப்பற்றி எரிந்தன!

வத்திராயிருப்பு அருகே நெல் உலா் களத்தில் இட நெருக்கடி! கூடுதல் களம் வசதி ஏற்படுத்தக் கோரிக்கை!!

ஆலங்குளத்தில் 739 மாணவா்களுக்கு மடிக்கணினிகள் அளிப்பு!

போராட்டக்காரா்கள் மீது அடக்குமுறை: ஈரான் அதிகாரிகள் மீது பொருளாதாரத் தடை - ஐரோப்பிய யூனியன் நடவடிக்கை

SCROLL FOR NEXT