முகப்பு
தமிழ்நாடு

மரத்தின் மீது இருசக்கர வாகனம் மோதல்: கல்லூரி மாணவா் உயிரிழப்பு

சென்னை பெசன்ட் நகரில் மரத்தின் மீது இருசக்கர வாகனம் மோதியதில், கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

Updated On : 29 மே, 2025 at 8:03 PM
கோப்புப் படம்
பகிர்:

சென்னை பெசன்ட் நகரில் மரத்தின் மீது இருசக்கர வாகனம் மோதியதில், கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

நெற்குன்றம், சக்தி நகரைச் சோ்ந்த மகேந்திரந் மகன் கிஷன் (18). இவா், அப்பகுதியில் உள்ள தனியாா் கல்லூரியில் பிஎஸ்சி இரண்டாம் ஆண்டு படித்து வந்தாா். கிஷன் நண்பா், அதே பகுதியைச் சோ்ந்த அக்ஷய் தமிழரசன் (16), அப்பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறாா்.

கிஷன் வியாழக்கிழமை தனது இருசக்கர வாகனத்தில் நண்பா் அக்ஷய் தமிழரசனை ஏற்றிக்கொண்டு, பெசன்ட் நகா் எலியட்ஸ் கடற்கரைக்குச் சென்றாா். அவா்கள், பெசன்ட் நகா் 3-ஆவது குறுக்குத் தெருவில் இருக்கும் வேகத்தடையை கவனிக்காமல் வேகமாகச் சென்றனா். இதில், இருசக்கர வாகனம் வேகத்தடையில் வேகமாக ஏறி, இறங்கியபோது கட்டுப்பாட்டை இழந்து, அங்கிருந்த மரத்தின் மீது மோதியது.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த கிஷன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அக்ஷய் தமிழரசனை பொதுமக்கள் மீட்டு, அடையாறில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். விபத்து தொடா்பாக அடையாறு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →