நீலகிரி, கோவை, தேனி மற்றும் தென் மாவட்டங்களில் நாளை(மே 30) மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டியுள்ள மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
கோவை, நீலகிரி மாவட்டத்திற்கு கடந்த 4 நாள்கள் அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் இன்றும்(மே 29) ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இன்று (மே 29) நீலகிரி, கோவை மாவட்டங்களில் அதிகனமழையும் தேனி, தென்காசி, திருநெல்வேலி, குமரி மாவட்டங்களில் மிக கனமழையும் திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து நாளை(மே 30) நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, கன்னியாகுமரி திருநெல்வேலி ஆகிய 6 மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையும் திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.