அரசுப் பேருந்து(கோப்புப்படம்)  
தமிழ்நாடு

புதிய பயண அட்டை வரும்வரை அரசுப் பேருந்தில் மாணவா்கள் இலவசமாக பயணிக்கலாம்

புதிய பயண அட்டை கிடைக்கும் வரை அரசு பேருந்தில் மாணவர்கள் கட்டணமின்றி பயணிக்கலாம் என்று போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் தெரிவித்துள்ளார்.

DIN

புதிய பயண அட்டை கிடைக்கும் வரை அரசு பேருந்தில் மாணவர்கள் கட்டணமின்றி பயணிக்கலாம் என்று போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், முதல்வரின் உத்தரவிற்கிணங்க, வரும் 02.06.2025 அன்று முதல் பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டும், அதன் பின்னர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அரசு பல் தொழில்நுட்ப கல்லூரி, அரசு தொழிற்பயிற்சி நிலையம் ஆகியவை திறக்கப்பட உள்ளதை முன்னிட்டும், 2025-26 கல்வியாண்டில் மாணவர் / மாணவியர்களுக்கான கட்டணமில்லா புதிய பேருந்து பயண அட்டை அவர்தம் கல்வி பயிலும் பள்ளி / கல்லூரியிலேயே அவர்களின் இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்யும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருவதால், அதற்குன்டான கால அளவினை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களால் 2024-25-ஆம் கல்வி ஆண்டிற்கு ஏற்கனவே வழங்கப்பட்ட பயண அட்டை, பள்ளி மாணவ/மாணவியர்கள் சீருடை அல்லது பள்ளிகளில் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை நடத்துநரிடம் காண்பித்து தத்தம் இருப்பிடத்திலிருந்து தாம் பயிலும் பள்ளி வரையிலும் சென்று வருவதற்கு, அதே போன்று அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அரசு பல் தொழில்நுட்ப கல்லூரி, அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவ/மாணவியர்கள் 2024-25 கல்வி ஆண்டில் வழங்கப்பட்ட கட்டணமில்லா பேருந்து பயண அட்டை அல்லது தங்களது கல்வி நிறுவனத்தால் வழங்கிய அடையாள அட்டையை நடத்துநரிடம் காண்பித்து கட்டணமின்றி பயணிக்க அனுமதிக்கப்படுகிறது.

பாமக அலுவலக முகவரியை மாற்றிய அன்புமணி

மேலும் பள்ளி துவங்கும்/முடியும் நேரம் வரை பேருந்துகள் சரியாக இயங்குவதை கண்காணித்திட அலுவலர்கள் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது. மேலும், உரிய பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகளை நிறுத்தி மாணவ / மாணவியர்களை பாதுகாப்பாக ஏற்றி, இறக்கி செல்ல அனைத்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக நடத்துநர் / ஓட்டுநர்களுக்கும் தக்க

அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரூர் சம்பவம் தமிழகத்தின் தலைகுனிவு; அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்! - இபிஎஸ்

பாடகர் ஸுபீன் கர்க் மரணம்: மேலாளர், விழா ஏற்பாட்டாளர் மீது கொலை வழக்கு!

அச்சுறுத்தலில் இந்திய ஜனநாயகம்! - கொலம்பியாவில் பிரதமர் மோடியை தாக்கிப் பேசிய ராகுல்!

மகளிர் உலகக் கோப்பை: 129 ரன்களுக்கு ஆட்டமிழந்த பாகிஸ்தான்!

காந்தி சிலைக்கு காவித்துண்டு: புதிய சர்ச்சை!

SCROLL FOR NEXT