வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், குடியுரிமை மீது நடத்தப்படும் தாக்குதல் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
பிகாரைத் தொடர்ந்து இரண்டாவது கட்டமாக நாடு முழுவதும் 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடைபெறவுள்ளது.
இதனையொட்டி சென்னை தியாகராய நகரில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
கூட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சியின் தலைவர்கள் பங்கேற்று தங்கள் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
கூட்டத்தில் பேசிய திருமாவளவன், சிறப்பு தீவிர திருத்தம் என்பது குடியுரிமை மீது நடத்தப்படும் தாக்குதல் எனக் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய வைகோ, ஜனநாயகத்தின் ஆணிவேரை ஆழிக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. இதற்கு தேர்தல் ஆணையம் துணைபோகிறது. தமிழகத்தில் தற்போதுள்ள வெளிமாநிலத்தவர்கள் தமிழகத்தின் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்து வாக்களிக்கும் நிலை உருவாகலாம். வெளி மாநிலத்தவரை தமிழ்நாடு வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் பணிகளை முறியடிக்க வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது. திமுகவின் நிலைப்பாட்டிற்கு உறுதுணையாக இருந்து செயல்பட வேண்டியது நமது கடமை என வைகோ குறிப்பிட்டார்.
இதையும் படிக்க | வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம்! தேர்தல் ஆணையத்துக்கு தவெக ஆலோசனை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.