சாலை விபத்து  DPS
தமிழ்நாடு

கோவில்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் பள்ளி வேன் - கார் மோதி விபத்து: ஒருவர் பலி

கோவில்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் பள்ளி வேன் - கார் மோதி விபத்துக்குள்ளானதில் காரில் வந்தவர் பலியானார்.

இணையதளச் செய்திப் பிரிவு

கோவில்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் பள்ளி வேன் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியானார், வேனில் இருந்த பள்ளி மாணவிகள் உள்பட 5 பேர் காயமடைந்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள சாத்தூர் சாலையில் அமைந்துள்ள தனியார் பள்ளி வேன், மாணவ மாணவிகளை பள்ளிக்கு அழைத்துச் செல்வதற்காக நாலாட்டின் புத்தூர் பகுதிக்கு சென்று கொண்டிருந்து.

வேனை கருப்பசாமி என்பவர் இயக்கியபோது, உதவியாளர் அய்யம்மாள் மற்றும் 10ம் வகுப்பு மற்றும் 2-ம் வகுப்பு படிக்கும் இரண்டு குழந்தைகள் இருந்துள்ளனர்.

பள்ளி வேன் மதுரை - நெல்லை தேசிய நெடுஞ்சாலையில், தனியார் கல்லூரி அருகே சென்று கொண்டிருந்தபோது நெல்லையில் இருந்து மதுரை நோக்கிச் சென்று கொண்டிருந்த கார், திடீரென சாலையை தாண்டி அதி வேகமாக வந்து பள்ளி வேன் மீது மோதியது. இதில் பள்ளி வேனின் முகப்பு மற்றும் காரின் முகப்பு அப்பளம் போல் நொறுங்கின.

விபத்தில், சம்பவ இடத்திலேயே காரில் வந்த வள்ளியூரை சேர்ந்த ஷேக் என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். காரை ஓட்டி வந்த அகஸ்டின், பள்ளி வேன் ஓட்டுநர் கருப்பசாமி, உதவியாளர் அய்யம்மாள் மற்றும் 10ஆம் வகுப்பு மற்றும் 2ஆம் வகுப்பு படிக்கும் இரண்டு குழந்தைகள் ஆகிய ஐந்து பேரும் காயம் அடைந்தனர்.

பலியான ஷேக்

பள்ளி வேன் மற்றும் காரின் முகப்பு அப்பளம் போல் நொறுங்கியதால் பள்ளி வேன் டிரைவர் கருப்பசாமி மற்றும் கார் ஓட்டுநர் அகஸ்டின் ஆகியோர் வெளியே வர முடியாமல் தவித்தனர். இது குறித்து தகவல் கிடைத்ததும் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

பள்ளி வேன் மற்றும் காரில் சிக்கி இருந்த ஓட்டுநர்கள் இருவரையும் தீயணைப்புத் துறையினர் மீட்டனர். காயம் அடைந்த ஐந்து பேரும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்தில் உயிரிழந்த ஷேக் உடல், கூராய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

கார்

இந்த விபத்து காரணமாக மதுரை - நெல்லை இடையே தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

விபத்து குறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குழித்துறையில் நாளை மின்நிறுத்தம்

வேலூா் ஆட்சியா் அலுவலகம் முன் நிற்காத அரசுப் பேருந்துகள்: அரசு ஊழியா்கள் அவதி

யமுனையை பாதுகாக்க விழிப்புணா்வு நிகழ்ச்சி தொடக்கம்

மழை நீா் தேங்கிய வயல்களை பாதுகாக்கும் வழிமுறைகள்

கடன் தொல்லை: வியாபாரி தற்கொலை

SCROLL FOR NEXT