தொல். திருமாவளவன்  (கோப்புப் படம்)
தமிழ்நாடு

முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும்

பெண்களுக்கு எதிரான குற்றங்களைக் கட்டுப்படுத்த முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த தமிழக அரசு முன்வரவேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

தினமணி செய்திச் சேவை

பெண்களுக்கு எதிரான குற்றங்களைக் கட்டுப்படுத்த முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த தமிழக அரசு முன்வரவேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளை போலீஸôர் விரைந்து கைது செய்துள்ளனர். எனினும் தமிழகத்தில் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது.

கடந்த 2024-ஆம் ஆண்டில் போக்úஸô வழக்குகளின் எண்ணிக்கை 3,407-இல் இருந்து 5,319- ஆகவும், பாலியல் வன்கொடுமை வழக்குகள் 406-இல் இருந்து 471-ஆகவும் அதிகரித்துள்ளது. இது பெண்களின் பாதுகாப்பில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பதையே காட்டுகிறது. இதுபோன்ற குற்றச் சம்பவங்கள் மதுபோதையில் இருப்பவர்களாலேயே நிகழ்கின்றன. கடந்த 2016-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின் போது பூரண மதுவிலக்கை அமல்படுத்துவோம் என திமுக, அதிமுக உள்ளிட்ட பெரும்பாலான அரசியல் கட்சிகள் வாக்குறுதி அளித்தன.

இனியும் தாமதிக்காமல், தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைக் கட்டுப்படுத்த பூரண மதுவிலக்கை நடைமுறைப்படுத்த தமிழக அரசு முன்வரவேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அழகே.. அஞ்சனா!

பாஜகதான் என்னை அழைத்தது: முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்

என் எடையை பற்றி பேச நீங்கள் யார்? உடல் எடை குறித்த கேள்விக்கு கௌரி கிஷன் பதில்

பார்ட்டி சீசன்... எமி ஜாக்சன்!

வளர்ப்பு நாய்களாலும் ரேபிஸ் வரலாம்! நாய் கடித்தால் உடனே செய்ய வேண்டியது என்ன?

SCROLL FOR NEXT