திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்(கோப்புப்படம்) DIN
தமிழ்நாடு

எஸ்.ஐ.ஆர். பணிகள்: நாளை(நவ. 9) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடர்பாக நாளை(நவ. 9) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

"திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் திமுக தலைமை அலுவலகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாளை (நவ. 9, ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி அளவில் காணொலிக் காட்சி வாயிலாக நடைபெறும்.

மாவட்டச் செயலாளர்கள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (SIR) தொடர்பாக விவாதிக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SIR of electoral rolls: DMK District Secretaries Meeting Tomorrow

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரேஷன் கடைகளில் கோதுமை தட்டுப்பாடு: இபிஎஸ் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் சக்கரபாணி பதில்

நவ. 13 வரை தென்மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

ஹிட்லரின் அறிவுரை... கஜோல்!

பிகார் 2ஆம் கட்டத் தேர்தலுக்கான பிரசாரம் நிறைவு!

தாதாசாகேப் பால்கே மோகன்லாலுக்கு பிரம்மாண்ட விழா!

SCROLL FOR NEXT