சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடைபெற்றுவரும் நிலையில், முகவரி மாறியவர்கள் அந்தந்தத் தொகுதி வாக்காளர் பதிவு அலுவலரைத் தொடர்புகொண்டு பெயர் இடம்பெறுவதவற்கான வழிமுறைகளை உறுதிப்படுத்திக்கொள்ளலாம் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் கடந்த 4}ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
வாக்காளர்களுக்கு தலா 2 படிவங்கள் வழங்கப்படுகின்றன. சென்னை மாநகராட்சிக்கு உளபட்ட தொகுதிகளில் மட்டும் இந்தப் பணியில் 3,178 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வாக்காளர்களின் முகவரிக்கு பணியாளர்கள் செல்லும் நிலையில், பல வாக்காளர்கள் பழைய முகவரி மாறி குடியிருப்பது தெரியவந்துள்ளது. அதனால், முகவரி மாறி சென்ற வாக்காளர்களை, எளிதில் தொடர்புகொள்ள முடியாத நிலையும் பணியாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
ஆகவே, சம்பந்தப்பட்ட வாக்காளர்கள் தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெறுவதை உறுதிப்படுத்த தொகுதி தேர்தல் அலுவலக உதவி மைய எண் 044 - 25619523 மற்றும் 1950 ஆகியவற்றில் தொடர்பு கொண்டு சம்பந்தப்பட்ட தொகுதி பதிவு அலுவலர்களின் விவரங்களைப் பெற்று, அவர்களைத் தொடர்புகொள்ளலாம்.
ஏற்கெனவே தொகுதி உதவி மைய எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அத்துடன் தொகுதிவாரியாக நியமிக்கப்பட்டுள்ள வாக்காளர் பதிவு அலுவலர்களையும், தொடர்புகொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.