முதல்வர் ஸ்டாலின் 
தமிழ்நாடு

எஸ்ஐஆர்-க்கு எதிராக திமுக கண்டன ஆர்ப்பாட்டம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக நவ. 11-ல் தமிழகம் முழுவதும் திமுக கண்டன ஆர்ப்பாட்டம்

இணையதளச் செய்திப் பிரிவு

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுகுறித்த அறிவிப்பில், ``கேள்விக்குறியாகியுள்ள பல கோடி மக்களின் வாக்குரிமை நம் மக்களின் வாக்குரிமையைப் பாதுகாக்க, கழகத்தினர் கண்ணும் கருத்துமாக இருந்து மேற்கொள்ள வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்தும், வரும் நவம்பர் 11-ஆம் நாள் அனைத்து மாவட்டங்களின் தலைநகரங்களிலும் எஸ்ஐஆர்-க்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டங்களைக் கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து வெற்றிகரமாக நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் எனும் சதி வலையில் சிக்காமல் நம் மக்களைக் காக்க வேண்டிய பொறுப்பு கழக நிர்வாகிகள் ஒவ்வொருவருக்கும் உள்ளது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கண்காணிப்பை பலப்படுத்துவோம்’’ என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: உழைப்பவர்களை எவராலும் வீழ்த்த முடியாது- செங்கோட்டையன்

CM Stalin announces protest against SIR

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு எதிராகப் போராட்டம்: படப்பிடிப்பு தளத்தில் காவல் துறை குவிப்பு!

இந்த வாரம் கலாரசிகன் - 09-11-2025

கலித்தொகையில் இளவேனில் காலம்!

போரைத் தடுக்கும் தும்பிகள்!

ஓரேர் உழவரா? நக்கீரரா?

SCROLL FOR NEXT