உழைப்பவர்களை எவராலும் வீழ்த்த முடியாது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஈரோடு கோபிசெட்டிபாளையத்தில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நேற்றைய முன்தினம் பல்வேறு சங்கங்கள் சார்பில் கடிதங்கள் வழங்கப்பட்டன. ஒவ்வொருவரும் எனக்காக கண்ணீர் சிந்தும் அளவு கடிதத்தில் உள்ளது. உழைப்பவர்களை எவராலும் வீழ்த்த முடியாது.
உழைப்பால் உயர்ந்த எம்ஜிஆரை எந்தச் சக்தியாலும் வீழ்த்த முடியவில்லை. தொண்டர்களுக்காக முன்னின்று தியாகங்கள் செய்தவர். அதேபோல ஜெயலலிதாவும் இயக்கத்தைக் காக்க நகை, பொருட்கள் அனைத்தும் 1989ஆம் ஆண்டில் வழங்கி இந்த இயக்கத்தை வலிமைப்படுத்தினார்.
அவர்களைப் பொறுத்தவரை மன்னிக்கின்ற உள்ளம், கருணை உள்ளம், தொண்டர்களை காப்பதற்கு என்ன உருவாக்க வேண்டுமோ அதை மனதில் வைத்துதான் அந்த பணிகளை சீரோடும் சிறப்பாகவும் நடத்தினார்கள். அந்த வழியில் நாங்களும் பயணங்களை மேற்கொண்டு வருகிறோம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.