சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கோப்புப் படம்
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: சிபிஐ பதிலளிக்க உத்தரவு!

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு தொடர்பாக...

இணையதளச் செய்திப் பிரிவு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் சிபிஐ பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2020-ஆம் ஆண்டில் தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்த வணிகர்கள் ஜெயராஜ், அவரது மகன் பெனிக்ஸ் ஆகியோரை போலீஸார் சட்டவிரோதக் காவலில் வைத்துத் தாக்கினர். இதில் தந்தை, மகன் இருவரும் உயிரிழந்தனா்.

இதுதொடர்பாக காவல் ஆய்வாளர் ஸ்ரீதா், உதவி ஆய்வாளா்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உள்பட 9 போ் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கின் விசாரணை மதுரை மாவட்ட சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கின் விசாரணையை விரைவில் முடிக்கக் கோரி இறந்த ஜெயராஜ் மனைவி ஜெயராணி சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார்.

இவ்வழக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, “ஜெயராஜ், பென்னிக்ஸ் கொல்லப்பட்ட வழக்கின் விசாரணையை முடிக்க 6 மாதம் அவகாசம் வேண்டும்” என்று சிபிஐ தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த நிலையில், “மேலும் ஆறு மாத கால அவகாசம் எதற்காக வேண்டும்? என்பது குறித்து பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்" என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

The Madurai bench of the Madras High Court has ordered the CBI to respond in the Sathankulam father-son murder case.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதுச்சேரியில் இலவச மனைப்பட்டா கேட்டு சட்டப்பேரவையை முற்றுகையிட்ட நரிக்குறவா்கள்!

தில்லி கார் வெடிப்பு சம்பவத்தில் நடந்தது என்ன? ஆணையர் விளக்கம்

மண்பாண்டத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கார் வெடிப்பு சம்பவம்: காயமடைந்தவர்களை சந்தித்த அமித் ஷா!

நைக்காவின் 2-வது காலாண்டு வருவாய் 6% உயர்வு!

SCROLL FOR NEXT