வேதாரண்யத்தில் தந்தையை அடித்துக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே செட்டிபுலம் கிராமத்தைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர் ரவீந்திரன் (50). இவரது மகன் அழகேசன் (22) மது அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில், மது அருந்துவதற்கு தனது தாயாரிடம் பணம்கேட்டு, அழகேசன் தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது.
இதனிடையே, இருவருக்குமான தகராறை தீர்த்துவைக்க முயன்ற தந்தை ரவீந்திரனை அழகேசன் செங்கல்லால் தாக்கியதில், ரவீந்திரன் நிகழ்விடத்திலேயே பலியானார்.
இந்தச் சம்பவத்தினையடுத்து, அழகேசனை கைது செய்த காவல்துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.