சிபிஐ அதிகாரிகள் முன் ஆஜராக வந்த நெரிசலில் காயம் அடைந்தவர்கள். 
தமிழ்நாடு

கரூர் கூட்ட நெரிசலில் காயம் அடைந்தவர்களிடம் சிபிஐ விசாரணை!

கரூர் நெரிசலில் காயமடைந்தவர்களிடம் சிபிஐ விசாரணை நடத்துவது பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

கரூர்: கரூரில் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கில் காயம் அடைந்தவர்கள் புதன்கிழமை காலை சிபிஐ அதிகாரிகள் முன் விசாரணைக்கு ஆஜராகினர்.

கரூர் வேலுச்சாமிபுரத்தில் செப். 27-ஆம் தேதி விஜய் பங்கேற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். 110 பேர் காயமடைந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவின்படி சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், நெரிசல் சம்பவம் நடைபெற்றபோது அங்கு ஆம்புலன்ஸுடன் வந்திருந்த வாகன ஓட்டுநர்களுக்கு சிபிஐ அதிகாரிகள் ஏற்கெனவே சம்மன் அனுப்பியிருந்தனர். இதுவரை சுமார் 20-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் வாகன உரிமையாளர்கள் ஆஜராகி சிபிஐ அதிகாரிகளின் கேள்விகளுக்கு பதிலளித்தனர்.

மேலும், சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலக உதவியாளர் குரு சரணிடமும் அண்மையில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை விசாரணை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் கூட்ட நெரிசலில் சிக்கி காயம் அடைந்தவர்களிடம் சிபிஐ அதிகாரிகள் கடந்த 4 நாள்களாக விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

5-வது நாளாக சிபிஐ அதிகாரிகள் தங்கி இருக்கும் கரூர் பொதுப் பணித்துறை சுற்றுலா மாளிகைக்கு புதன்கிழமை காலை 11 மணியளவில் நெரிசலில் சிக்கி காயமடைந்த மூன்று பேர் சிபிஐ அதிகாரிகள் முன் விசாரணைக்கு ஆஜராகினர். அவர்களிடம் சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Karur stampede: CBI to investigate those injured

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள்!

மே.இ.தீவுகளை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபார வெற்றி; இந்தியாவுக்கு அரையிறுதி வாய்ப்பு பிரகாசம்!

இது இந்தியா; வட கொரியா அல்ல! -பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி விமர்சனம்

சென்செக்ஸ் 27.46 புள்ளிகள் சரிந்த நிலையில் நிஃப்டி 0.06% உயர்வு!

8-ம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்துக்குத் தடை! ஏன்?

SCROLL FOR NEXT