தமிழ்நாடு

அரசுப் பேருந்துகள், டிராக்டர் மோதி விபத்து: 11 பேர் படுகாயம்!

இரு அரசுப் பேருந்து, டிராக்டர் மோதி விபத்து தொடர்பாக...

தினமணி செய்திச் சேவை

திருவிடைமருதூர் அருகே 2 அரசுப் பேருந்துகள் மற்றும் டிராக்டர் மோதிய விபத்தில் 11 பயணிகள் படுகாயம் அடைந்தனர்

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே கோவிந்தபுரம் பகுதியில், மயிலாடுதுறையில் இருந்து கும்பகோணம் நோக்கி வந்த அரசுப் பேருந்து முன்னாள் சென்ற டிராக்டரை முந்த முயன்ற போது, டிராக்டரின் சக்கரத்தில் பேருந்து மோதியது.

மோதிய வேகத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, ஆடுதுறை நோக்கி வந்த அரசுப் பேருந்தின் மீது நேருக்கு நேரு மோதி விபத்துக்குள்ளானது.

இதில் பேருந்து கண்ணாடிகள் நொறுங்கியது. இதில் இரண்டு பேருந்துகளிலும் பயணம் செய்த 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.‌

இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருவிடைமருதூர் மற்றும் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த விபத்து குறித்து திருவிடைமருதூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் கும்பகோணம் - மயிலாடுதுறை சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Two government buses collide with a tractor in an accident

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குடியரசு நாள்: தேசியக் கொடியேற்றினார் ஆளுநர் ஆர்.என்.ரவி

துலா ராசிக்கு சுபநிகழ்ச்சி: தினப்பலன்கள்

மக்களை முதன்மையாகக் கொண்ட குடியரசு இந்தியா!

ராசிபுரத்தில் மாணவா்கள் பங்கேற்ற மாரத்தான்

கேரம் விளையாட்டுப் போட்டி!

SCROLL FOR NEXT