காஞ்சிபுரத்தில், பகுதி நேர நியாய விலை கடையை ஒரே மணி நேரத்தில் முழுநேர நியாய விலை கடையாக எம்எல்ஏ சுந்தர் மாற்றியது அப்பகுதி மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.
அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று, ஒரு மணி நேரத்தில் பகுதி நேர நியாய விலை கடையாக இயங்கி வந்ததை, முழுநேர நியாய விலை கடையாக மாற்ற எம்.எல்.ஏ. சுந்தர் பரிந்துரைத்து, உடனடியாக கடை முழு நேரம் செயல்படும் வகையில் மாற்றப்பட்டதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 47 வது வார்டு பகுதியில் அமைந்துள்ளது நியாய விலை கடை. இப்பகுதியில் ஏராளமான நெசவாளர் குடியிருப்புகள் மற்றும் வளர்ந்து வரும் புறநகர் பகுதியாக இது விளங்கி வருகிறது.
இந்நிலையில் இந்த நியாய விலைக் கடை செவ்வாய், வியாழன் மற்றும் சனி ஆகிய மூன்று நாள்களில் மட்டுமே இயங்கும் என்பதால் 938 குடும்ப அட்டைதாரர்கள் பொருள்கள் பெறுவதில் சிக்கலும், விடுமுறை எடுத்து பொருள்கள் வாங்க வருவதால் வருவாய் இழப்பும் ஏற்படுவதாக அப்பகுதிக்கு வந்த எம்எல்ஏ சுந்தரிடம் மக்கள் குறைகளாக முறையிட்டனர்.
உடனடியாக அவர் கூட்டுறவுத் துறை உயர் அலுவலரிடம் இது குறித்து கேட்டு முழு நேர நியாய விலைக் கடையாக அதனை மாற்ற பரிந்துரைத்தார்.
உடனடி ஆய்வு மேற்கொண்டு கூட்டுறவு நியாய விலைக் கடை ஊழியர் மகேசை முழு நேர ஊழியராக அப்பகுதிக்கு நியமித்து ஆணை வெளியிட்டார்.
இதுகுறித்து அறிந்த மக்கள் மீண்டும் அங்கு வந்த எம்எல்ஏ சுந்தருக்கு நன்றி தெரிவித்த நிலையில், மக்களுக்கு இனிப்புகள் வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தார்.
ஒரே மணி நேரத்தில் பகுதி நேர நியாய விலைக் கடை முழுநேர நியாய விலைக் கடையாக மாறியது அனைவருக்கும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.