சென்னை ஒன் செயலியில் ஒரு ரூபாய்க்கு மெட்ரோ ரயில், புறநகர் ரயில் மற்றும் மாநகரப் பேருந்து பயணச் சீட்டுகளைப் பெறும் சலுகையைச் சென்னை ஒருங்கிணைந்த பெருநகரப் போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது.
சென்னையில் பொது போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையில், சென்னை ஒருங்கிணைந்த பெருநகரப் போக்குவரத்து ஆணையம் உருவாக்கிய ‘சென்னை ஒன்’ செயலியை முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்துவைத்தார்.
ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு தளங்களில் செயல்படக்கூடிய இந்தச் செயலியைப் பயன்படுத்தி மாநகா் பேருந்து, மெட்ரோ, புறநகா் ரயில்களில் பயணம் செய்வதற்கான பயணச்சீட்டை இந்த செயலி மூலம் பெறமுடியும்.
ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்குப் பயணம் மேற்கொள்ள வெவ்வேறு போக்குவரத்துச் சேவைகளைப் பயன்படுத்துவோர், இந்த செயலி மூலம் ஒரே டிக்கெட்டைப் பெறும் வசதி உள்ளதால் சென்னை மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில், சென்னை ஒன் செயலியைப் பதிவிறக்கம் செய்து, சென்னை மெட்ரோ, புறநகர் ரயில் அல்லது மாநகரப் பேருந்துகளில் ஏதேனும் ஒன்றில் முதல்முறையாகப் பயணம் செய்பவர்களுக்கு ஒரு ரூபாய் மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கூகுள் பே, போன் பே போன்ற பிஎச்ஐஎம் பேமண்ட் அல்லது நவி யுபிஐ பேமண்ட் மூலம் பணம் செலுத்துபவர்களுக்கு மட்டுமே இந்த சலுகை பொருந்தும்.
குறுகிய காலம் மட்டுமே இந்த சலுகை வழங்கப்படும் என்று சென்னை ஒருங்கிணைந்த பெருநகரப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
நாட்டிலேயே முதல்முறையாக, அனைத்துப் பொது போக்குவரத்தையும் இணைக்கும் வகையில் உருவாக்கப்பட்ட இந்த ‘சென்னை ஒன்’ செயலியை ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய 4 மொழிகளில் பயன்படுத்தலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.