வடகிழக்குப் பருவமழை 
தமிழ்நாடு

நவ.17 முதல் வேகமெடுக்கும் வடகிழக்குப் பருவமழை!

வடகிழக்குப் பருவமழை நவம்பர் 17 முதல் தீவிரமடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இணையதளச் செய்திப் பிரிவு

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை நவம்பர் 17 முதல் தீவிரமடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்குப் பருவமழை கடந்த அக்டோபர் 16-ஆம் தேதி தொடங்கியது. தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளுக்கு வடகிழக்குப் பருவமழை காலமே அதிக மழைப்பொழிவை அளித்து வருகிறது.

கடந்த மாத இறுதி வரை வடகிழக்குப் பருவமழையின் முதல் இரண்டு சுற்று மழை பெய்துள்ளது. இரண்டு வாரங்களாக மழை குறைந்து காணப்படுகிறது. இடையிடையே வெப்ப சலனம் காரணமாக மழை பெய்தாலும் இந்த மாதத்திற்கான வடகிழக்குப் பருவமழை இன்னும் முழு வீச்சில் தொடங்கவில்லை.

இந்த நிலையில் தென்சீன கடல் பகுதியிலிருந்து கிழக்கு திசைக்காற்றும் வட இந்தியாவிலிருந்து வடக்கு திசை காற்று வடகிழக்கு காற்றாக மாறியுள்ளது. இதனிடையே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்யும்.

நவம்பர் 17-க்குப் பிறகு பருவமழை தீவிரமடையும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இதற்கடுத்து வங்கக்கடலில் அடுத்தடுத்து காற்றழுத்த தாழ்வுப் பகுதிகள் உருவாக உள்ளது. வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு நிலை காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று வரும் நவம்பர் 17 முதல் வடகிழக்குப் பருவமழை தீவிரமாகும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்தத் தாழ்வு வலுவடைந்து புயலாக மாற வாய்ப்புகள் அதிகமுள்ளது. எனவே, டிசம்பர் மாத மத்திய பகுதியில் நல்ல மழைக்கான வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

The Meteorological Department has stated that the northeast monsoon will intensify in Tamil Nadu from November 17.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாம்பியன்ஸ் லீக்: அடுத்த சுற்றுக்குத் தேர்வான, வெளியேறிய அணிகளின் விவரங்கள்!

மும்மூர்த்திகள் ஒரே தலத்தில் அருள்பாலிக்கும் திருத்தலங்கள்!

என் பெயர் தமிழ் பெயர் அல்ல! நீங்கள் தமிழ் பெயர் சூட்டுங்கள்! முதல்வர் மு.க.ஸ்டாலின்

யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வு: பொதுத் தாள் II - பாடத்திட்டம்!

பிப். 2-ல் விஜய் தலைமையில் தவெக ஆண்டு விழா!

SCROLL FOR NEXT