கோவையில் வரும் நவ. 19 ஆம் தேதி நடைபெறும் தென்னிந்திய இயற்கை விவசாயிகள் மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வரவிருப்பதாக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று(நவ. 13) செய்தியாளர்களிடம் பேசுகையில் “தமிழக அரசு விவசாயத்திற்கு உரிய முன்னுரிமை அளிப்பதில்லை. பிரதமர் நரேந்திர மோடி வரும் 19ஆம் தேதி கோவை வருகிறார்.
தென்னிந்திய இயற்கை விவசாய மாநாட்டில் கலந்து கொண்டு 50க்கும் மேற்பட்ட விவசாய விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடுகிறார்.
பிரதமர் விவசாயத்திற்காக பிரத்யேகமாக நேரத்தை ஒதுக்கி வருவது குறிப்பிடத்தக்கது” என்றார்.
மேலும், “சமூக விரோதச் செயல்கள் அதிகரித்து வருகின்றன. குற்றங்கள் பெருகி வருகின்றன. திமுக அரசு காவல்துறையை சரியாகக் கையாளவில்லை. காவல்துறையைக் கோட்டை விட்டுள்ளது.
கோவை கல்லூரி மாணவி சம்பவத்தையும் இதன் ஒரு எடுத்துக்காட்டாக பார்க்கலாம். முதலமைச்சர் காவல் துறையை இன்னும் சிறப்பாக கையாள வேண்டும்,” என்றார்.
கர்நாடக மாநிலத்தில் அவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார் என்ற கேள்விக்கு, “நான் தொழில் முறையாகச் செய்கிறேன். எந்த தொழிலையும் செய்ய எனக்கு உரிமை உள்ளது. நியாயமான வழியில் சம்பாதித்து அரசியல் செய்கிறேன்.
நான் இளைஞர்களிடம் சொல்லுவது – ஆரோக்கியமாக சம்பாதியுங்கள் என்பதே. நான் சாராய ஆலை நடத்தவில்லை. முதலமைச்சர் என்ன தொழில் செய்கிறார் என்பதை அவரே சொல்லட்டும். டி.ஆர். பாலு வந்த கார் ஒரு சாராய ஆலையின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. எனக்கு தொழில் துவங்க 5 லட்சம் முதலீட்டுப் பணம் போதும்,” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.