தங்கம் விலை ஒரே நாளில் ரூ.1,280 குறைவு!
சென்னையில் தங்கம் விலை ஒரே நாளில் இருமுறை சரிவு..
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ. 1,280 குறைந்துள்ளது.
ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில நாள்களாக ஏற்ற இறக்கங்களை கண்டு வருகின்றது. அந்தவகையில் இன்று ஒரே நாளில் இரண்டு முறை தங்கம் விலை சரிந்துள்ளது.
காலை நிலவரப்படி ஒரு கிராம் ரூ. 60 குறைந்து ரூ.11,840-க்கும், ஒரு சவரன் ரூ.480 குறைந்து ரூ. 94,720-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
வர்த்தகம் நிறைவுபெறும் நிலையில் மாலை நிலவரப்படி கிராமுக்கு ரூ.160 குறைந்து ரூ. 11,740-க்கும், சவரனுக்கு ரூ. 800 குறைந்து ரூ. 93,920-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை ஒரேநாளில் இருமுறை குறைந்தது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் வெள்ளி விலை காலையில் ரூ. 3 குறைந்த ஒரு கிராம் ரூ.180-க்கு விற்கப்பட்ட நிலையில், மாலையில் மாற்றமின்றி அதே விலையில் நீடிக்கிறது.
The price of gold jewellery in Chennai has dropped by Rs. 1,280 in a single day.
இதையும் படிக்க: முதல்வர் வேட்பாளர் தேஜஸ்விக்கு 8,500 வாக்குகள் பின்னடைவு!