சென்னையில் வெள்ளி விலை ஒரே நாளில் இருமுறை சரிந்துள்ளது மக்கள் மத்தியில் சற்று ஆறுதலைத் தந்துள்ளது.
கடந்த சில நாள்களாகத் தங்கத்தோடு போட்டிப்போட்டுக் கொண்டு வெள்ளி விலையும் தொடர்ந்து அதிகரித்து வந்தது நடுத்தர மக்களுக்கு பெரும் சுமையாக மாறியது. வெள்ளி வாங்குவதும் சாத்தியமில்லாத நிலை ஏற்பட்டது மக்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்து வருகின்றது.
சென்னையில் இன்று (ஜன. 31) காலை வர்த்தகம் தொடங்கியதும் ஒரு கிராம் வெள்ளி ரூ. 55 குறைந்து ரூ. 350-க்கும், ஒரு கிலோ ரூ. 55 ஆயிரம் குறைந்து ரூ. 3,50,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், மாலையில் வர்த்தகம் நிறைவுபெறும்போது வெள்ளி விலை மீண்டும் குறைந்துள்ளது. வெள்ளி விலை காலை ரூ. 55-ம், மாலை ரூ.30-ம் குறைந்துள்ளது.
ஒரே நாளில் வெள்ளி விலை காலை கிலோவுக்கு ரூ. 55 ஆயிரமும், மாலை ரூ. 30 ஆயிரமும் என கிலோவுக்கு ரூ. 85 ஆயிரம் குறைந்துள்ளது.
அதன்படி, மாலை நிலவரப்படி ஒரு கிராம் வெள்ளி விலை ரூ. 320-க்கும், ஒரு கிலோ ரூ, 3,20,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தின் விலை காலையில் ரூ. 7,600 குறைந்து ஒரு கிராம் ரூ. 14,900-க்கும், ஒரு சவரன் ரூ. 1,19,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வர்த்தகம் நிறைவுபெறும் போதும் தங்கத்தின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி அதே விலையில் நீடிக்கிறது.
தங்கம் - வெள்ளி திடீரென குறையக் காரணம்?
அமெரிக்க ரிசர்வ் வங்கிக்கு புதிய தலைவர் பரிந்துரைக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து விலை சரிந்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.