குறைந்த காற்றழுத்தத் தாழ்வு 
தமிழ்நாடு

வங்கக்கடலில் உருவானது காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி!

வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு உருவானது பற்றி..

இணையதளச் செய்திப் பிரிவு

இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியானது அடுத்த 24 மணி நேரத்தில் மிக மெதுவாக மேற்கு-வடமேற்கு திசையில் நகரக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 19-ம் தேதி அந்தமான கடல் பகுதியில் மற்றொரு குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்குப் பருவமழை ஓரிரு நாள்களில் தீவிரமடையும் என வானிலை ஆய்வு மையம் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

முன்னதாக, தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை கடந்த அக்.16ல் தொடங்கியது. இதன்பிறகு உருவான முதல் காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவிழந்தது. இதையடுத்து உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி மோந்தா புயலாக மாறி ஆந்திரத்தின் மசூலிப்பட்டினம் அருகே கரையைக் கடந்தது. இதனால் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் நல்ல மழை பொழிவு இருந்தது குறிப்பிடத்தக்கது.

The India Meteorological Department has reported that a low pressure area has formed in the southwest Bay of Bengal adjacent to Sri Lanka.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தருமபுரி: 2025 இல் 689.93 மி.மீ. மழைப் பொழிவு

ஜன. 5-இல் தேமுதிக மாவட்ட செயலா்கள் கூட்டம்

சூலூா் அருகே சாலையோரம் கிடந்த அம்மன் சிலை

தமிழக மீனவர்கள் 13 பேர் இலங்கையில் கைது!

ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா ஓய்வு!

SCROLL FOR NEXT