மழை கோப்புப்படம்.
தமிழ்நாடு

அடுத்த 2 நாள்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் அடுத்த 2 நாள்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இணையதளச் செய்திப் பிரிவு

தமிழகத்தில் அடுத்த 2 நாள்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் இலங்கை மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நேற்று (14-11-2025) நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, இன்று (15-11- 2025) காலை 0830 மணி அளவில், இலங்கை கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு- வட மேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து செல்லக்கூடும்.

இதன் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் சனிக்கிழமை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

16-11-2025: கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

ரஷியாவின் முக்கிய எண்ணெய் மையத்தின் மீது உக்ரைன் தாக்குதல்!

17-11-2025: கடலோர தமிழகத்தில் அநேக தமிழகத்தில் அநேக இடங்களிலும், இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

காஞ்சிபுரம், விழுப்புரம், செங்கல்பட்டு, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கன முதல் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், இராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

An orange warning for very heavy rain has been issued in Tamil Nadu for the next 2 days.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

"காங்கிரஸின் நிலை தான் தவெகவிற்கும்!” SIR எதிர்ப்பு பற்றி அண்ணாமலை! | TVK | BJP

இந்தோனேசியாவில் திடீர் வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்த தண்ணீர்! | Flash Flood | Shorts

கேரளத்தில் ஒரே வீட்டில் வசித்து வந்த வயதான தாயும் மகனும் தற்கொலை: போலீஸ் விசாரணை

ஐபிஎல் மினி ஏலம்- எந்தெந்த அணியிடம் எவ்வளவு தொகை?

10 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை! பாஜக பிரமுகருக்கு சாகும் வரை ஆயுள் சிறை!

SCROLL FOR NEXT