கோப்புப் படம் 
தமிழ்நாடு

1 முதல் பிளஸ் 2 வரை அரையாண்டுத் தேர்வு: டிச. 10ல் தொடக்கம்

1 முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளுக்கு அரையாண்டுத் தேர்வு தொடங்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இணையதளச் செய்திப் பிரிவு

1 முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளுக்கு அரையாண்டுத் தேர்வு தொடங்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநரக அறிவிப்பு விவரம்:

தமிழகத்தில் பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தைப் பின்பற்றும் அனைத்து விதமான பள்ளிகளிலும் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 10 முதல் 23 ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது.

இதில் 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கு டிச. 10 ஆம் தேதியும், 6 முதல் 9 ஆம் வகுப்புகளுக்கு டிச.15 ஆம் தேதியும் தேர்வுகள் தொடங்கும். இதற்குரிய பாடவாரியான கால அட்டவணை பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதேபோல், தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கான தேர்வு டிசம்பர் 15-ல் தொடங்கி 23-ம் தேதி வரை முடிவடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | கரூர் சம்பவம்: கூட்ட நெரிசலில் காயமடைந்தவர்களிடம் சிபிஐ அதிாரிகள் விசாரணை

Half-yearly exams from 1st to Plus 2: Starts on Dec. 10th

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரம்... பிரிகிதா சாகா!

வான்நிலா... தர்ஷா குப்தா!

செங்கோட்டை காா் வெடிப்பு நிகழ்ந்த இடத்தில் கண்டெடுக்கப்பட்ட 9 எம்எம் தோட்டாக்கள்

ராபின்ஹுட் டிரெய்லர்!

விழியோரக் கவிதை... மேகா சுக்லா!

SCROLL FOR NEXT