சபரிமலை சீசன் தொடங்கியதைத் தொடர்ந்து ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.
விராலிமலை ஐயப்பன் கோயிலில் கார்த்திகை மாத பிறப்பையொட்டி நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் அதிகாலை எழுந்து குளித்து மாலை அணிந்து தங்கள் விரதத்தை தொடங்கினர்.
கார்த்திகை மாத பிறப்பையொட்டி விராலிமலை முருகன் மலைக்கோயில், வன்னி மரம் கோயில் நடை அதிகாலை திறக்கப்பட்டு சுவாமிக்கு பல்வேறு பழங்களால் அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது.
முன்னதாக வன்னி மரம் ஐயப்பன் கோயிலில் யாகசாலை பூஜை செய்யப்பட்டு கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. அதனைத்தொடர்ந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் நிறைவேற்றுவதற்கு அதிகாலை முதல் துளசி மாலை அணிந்து வருகின்றனர்.
இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் மாலை அணிந்து கொண்டனர். பக்தர்கள் 48 நாள் விரதம் இருந்து சபரிமலையில் ஜோதி தரிசனம் செய்ய உள்ளனர். இதேபோல் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து இன்று விரதத்தை தொடங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.