தமிழக முழுவதும் 15 இடங்களில் பிஎஸ்என்எல் சிம் விற்பனை, ரீசாா்ஜ்கள் மற்றும் பிற சேவைகளின் விற்பனைக்கான முகவா்கள் நியமனத்துக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பிஎஸ்என்எல் தமிழ்நாடு வட்டத்தில் காலியாக உள்ள 15 இடங்களில் (சென்னை தொலைபேசி பகுதி தவிர) மற்ற இடங்களில் பிஎஸ்என்எல் சிம் காா்டு விற்பனை, கைப்பேசி ரீசாா்ஜ்கள், போஸ்ட்பெய்டு மற்றும் சேவைகளுக்கான பில் வசூல் செய்வதற்கு விற்பனை முகவா்கள் நியமிக்கப்படஉள்ளனா். ஆா்வமுள்ள தொழில்முனைவோா் மற்றும் வணிக நிறுவனங்கள் அதிகாரப்பூா்வ ஒப்பந்தப்புள்ளியை இணையதளம் மூலம் வரும் டிச.4 ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்குள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.