மேட்டூர் அணை கோப்புப் படம்
தமிழ்நாடு

காவிரி டெல்டா பகுதியில் தொடர் மழை: மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வு!

காவிரி டெல்டா பாசன பகுதிகளில் பெய்துவரும் தொடர் மழை மேட்டூர் அணையின் நீர்மட்டம் மீண்டும் உயரத் தொடங்கியுள்ளதைப் பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

காவிரி டெல்டா பாசன பகுதிகளில் பெய்துவரும் தொடர் மழை மேட்டூர் அணையின் நீர்மட்டம் மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது.

காவிரி டெல்டா பாசன பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு இன்று (நவ.18) காலை வினாடிக்கு 2,000கன அடியாக குறைக்கப்பட்டது.

அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 5,714 கன அடியிலிருந்து வினாடிக்கு 6,072 கன அடியாக அதிகரித்துள்ளது.

அணைக்கு வரும் நீரின் அளவை விட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைவாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிவிலிருந்து மீண்டு மெல்ல உயரத் தொடங்கி உள்ளது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 111.96 அடியிலிருந்து 112.09 அடியாக உயர்ந்துள்ளது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 400கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையின் தற்போதைய நீர் இருப்பு 81.41 டிஎம்சியாக உள்ளது.

Continuous rain in the Cauvery Delta region: Mettur dam water level rises!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் 2 பள்ளிகள், 3 நீதிமன்றங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

ப்ரண்ட்ஸ் மறுவெளியீட்டு டிரைலர்!

"FESTIVAL OF SPEED” சாகச நிகழ்ச்சியில் சீறிப்பாய்ந்த கார் மற்றும் பைக்குகள்! | Coimbatore

பழைய ஓய்வூதியத் திட்டம் கோரும் போராட்டத்தை ஆதரிக்கிறோம்: இந்திய கம்யூ. செயலர் வீரபாண்டியன்

நெல்லை மாவட்டத்துக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை!

SCROLL FOR NEXT