ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு 2, 2ஏ பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
மாநிலம் முழுவதும் பல்வேறு அரசுத் துறைகளில் காலியாக உள்ள சார்-பதிவாளர், இளநிலை உதவியாளர், வனவர் உள்ளிட்ட பல்வேறு காலி இடங்களை நிரப்ப குரூப் 2, 2 ஏ தேர்வு நடத்தப்படுகிறது.
இதற்கிடையே, 645 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான (குரூப் 2, குரூப் 2 ஏ) அறிவிக்கை கடந்த ஜூலை மாதம் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது.
இந்த நிலையில், இந்தப் பணிகளுக்கான காலி இடங்கள் மேலும் 625 அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 2025-26-ஆம் ஆண்டில் குரூப் 2, 2ஏ பணிகளுக்கான 1,270 காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அரசுத் துறை, நிறுவனங்களிடம் இருந்து காலிப் பணியிடங்கள் அதிகரித்து பெறப்படும் நிலையில் மேலும் உயர்த்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.