கோப்புப்படம் EPS
தமிழ்நாடு

அடுத்த 2 மணிநேரம் சென்னை, 10 மாவட்டங்களில் மழை தொடரும்!

அடுத்த 2 மணிநேரம் மழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்...

இணையதளச் செய்திப் பிரிவு

தமிழகத்தில் உள்ள 11 மாவட்டங்களில் அடுத்த 2 மணிநேரத்துக்கு மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

இலங்கை கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடலில் ஞாயிற்றுக்கிழமை (நவ. 16) நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி திங்கள்கிழமை (நவ. 17) காலை தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய இலங்கை கடலோரப் பகுதிகளில் நிலவியது.

இந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி இன்று (நவ. 18) மேற்கு- வடமேற்கு திசையில் மெதுவாக நகரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக இன்று கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

இந்த நிலையில், அடுத்த 2 மணி நேரத்துக்கு (பகல் 1 மணி வரை) செங்கல்பட்டு, சென்னை, கடலூர், காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கள்ளச்சூரிச்சி, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவள்ளூர், திருவாரூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Rain will continue in Chennai and 10 districts for the next 2 hours

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாலய்யாவின் 111 ஆவது படத்தில் இணைந்தார் நயன்தாரா!

“பெங்களூருவை விட்டு வெளியேறுங்கள்”... ரூ. 50 கோடி வரையிலான சலுகைகளுடன்.!

சென்னையை நோக்கி நகரும் மேகக் கூட்டங்கள்! மழைக்கு வாய்ப்பு!

வாக்குச்சாவடி அலுவலர்களே திணறுகிறார்கள்; அசாமுக்கு மட்டும் சலுகை ஏன்? - என்.ஆர். இளங்கோ

தில்லியில் 2 பள்ளிகள், 3 நீதிமன்றங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

SCROLL FOR NEXT