பிகார் தேர்தல் வெற்றிக்கு காரணம் எஸ்ஐஆர்தான் என்றும் நிதீஷ் குமாரைப்போல தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி முதல்வராக வருவார் என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார்.
திண்டுக்கல்லில் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,
"பிகார் தேர்தல் அப்படியே தமிழ்நாட்டிலும் எதிரொலிக்கும். 2026 தேர்தலில் 220 இடங்களுக்கு மேல் அதிமுக வெற்றி பெற்று நிதீஷ் குமாரைப்போல தமிழ்நாடு முதலமைச்சராக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வருவார்.
எஸ்ஐஆரை எதிர்க்க வேண்டிய அவசியம் இல்லை. 5, 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடப்பதுதான். எஸ்ஐஆர் பணிகளில் திமுகவினர்தான் நிற்கின்றனர். அனைவரும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும். இது அனைவரின் உரிமை. ஏன் திமுக நடுங்குகிறார்கள் என்று தெரியவில்லை. மக்களுக்கு உண்மை என்னவென்று தெரியும்.
அரசு ஊழியர்களுக்கு பணிச்சுமை இருக்கிறது. அவர்கள் பணியைப் புறக்கணிப்பது சரிதான்.
எஸ்ஐஆர் பணிகளால் திண்டுக்கல் தொகுதியில் சுமார் 40,000 - 50,000 வாக்குகள் குறையும். அவை எல்லாம் போலி வாக்குகள், இறந்தவர்கள். இந்த எஸ்ஐஆரில் எல்லாம் சரிசெய்யப்பட்டு விடும். பிகார் வெற்றிக்கு காரணமே எஸ்ஐஆர்தான்" என்று பேசியுள்ளார்.
இதையும் படிக்க | வாக்குச்சாவடி அலுவலர்களே திணறுகிறார்கள்; அசாமுக்கு மட்டும் சலுகை ஏன்? - என்.ஆர். இளங்கோ
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.