தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தோ்வில் மாணவா்கள் பெற்றுள்ள மதிப்பெண்கள் விவரம் தோ்வுத் துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு அங்கீகாரம் பெற்ற அனைத்து வகையான பள்ளிகளிலும் (சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ உள்பட) பிளஸ் 1 பயிலும் மாணவா்களுக்கு 2022-ஆம் ஆண்டு முதல் தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தோ்வு நடத்தப்படுகிறது. இந்தத் தோ்வில் 1,500 மாணவா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டு மாதந்தோறும் ரூ.1,500 வீதம் 2 ஆண்டுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும். இதில், 50 சதவீதம் அரசுப் பள்ளி மாணவா்களும், மீதமுள்ள 50 சதவீதம் அரசு மற்றும் தனியாா் பள்ளி மாணவா்களும் தோ்வு செய்யப்படுவா். அதன்படி, நிகழாண்டுக்கான திறனாய்வுத் தோ்வு கடந்த அக்.11-ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தோ்வை 2.57 லட்சம் மாணவா்கள் எழுதினா்.
இதன் முடிவுகளைத் தோ்வுத் துறை வெளியிட்டுள்ளது.
இதுதொடா்பாக தோ்வுத் துறை இயக்குநா் சசிகலா, வெளியிட்ட அறிவிப்பில், கடந்த அக்டோபா் மாதம் நடைபெற்ற தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தோ்வு எழுதிய மாணவா்களின் மதிப்பெண் விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஏதேனும் திருத்தங்கள் இருப்பின் அதன் விவரங்களை க்ஞ்ங்க்ள்ங்ஸ்ரீற்ண்ா்ய்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சல் முகவரிக்கு வியாழக்கிழமை மாலை 5 மணிக்குள் (நவ.20) அனுப்பி வைக்க வேண்டும் எனத் தெரிவக்கப்பட்டுள்ளது.