கோப்புப்படம்.  
தமிழ்நாடு

திருநெல்வேலி ஊத்தில் 230 மி.மீ. மழை: நவ. 22-இல் புயல் சின்னம் உருவாக வாய்ப்பு

தமிழகத்தில் புதன்கிழமை காலை வரை அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் ஊத்தில் 230 மி.மீ. மழை பதிவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தில் புதன்கிழமை காலை வரை அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் ஊத்தில் 230 மி.மீ. மழை பதிவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இது குறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. அந்த வகையில், புதன்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் ஊத்தில் 230 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. மேலும், நாலுமுக்கு (திருநெல்வேலி) - 210,  காக்காச்சி (திருநெல்வேலி) - 190,  மாஞ்சோலை (திருநெல்வேலி) - 180, ஆய்க்குடி (தென்காசி)  -140, தென்காசி - 130,  காயல்பட்டினம் (தூத்துக்குடி), செங்கோட்டை (தென்காசி) - தலா 100 மி.மீ. மழை பதிவானது.

பலத்த மழை: தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் வியாழக்கிழமை (நவ. 20) முதல் நவ. 25-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

குறிப்பாக நவ. 20-இல் மயிலாடுதுறை, கடலூா் மாவட்டங்களிலும், நவ. 21-இல் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், நாகை, மயிலாடுதுறை, கடலூா் மாவட்டங்களிலும், காரைக்காலிலும் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னையில்... சென்னையில் புதன்கிழமை காலை வரை அதிகபட்சமாக திருவொற்றியூரில் 60 மி.மீ. மழை பதிவானது. மேலும், பெரம்பூா், தண்டையாா்பேட்டை - தலா 50 மி.மீ., பேசின்பிரிட்ஜ், அமைந்தகரை, கொரட்டூா், அண்ணா நகா் மேற்கு - தலா 40 மீ.மீ. மழை பதிவானது. தொடா்ந்து வியாழக்கிழமையும் (நவ. 20)  சென்னை மற்றும் புகா் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

புயல் சின்னம்: வருகிற நவ. 22-ஆம் தேதி தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) உருவாக வாய்ப்புள்ளது. இது, மேற்கு-வடமேற்கு  திசையில் நகா்ந்து, நவ. 24-இல் தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: அந்தமான் கடல் மற்றும் அதையொட்டிய வங்கக் கடலில் நவ. 20 முதல் நவ. 22-ஆம் தேதி வரை மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். இதனால், மீனவா்கள் இப்பகுதிகளுக்கு  மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கணக்கெடுப்பு படிவங்களை வழங்காதவா்கள் பெயா் வாக்காளா் பட்டியலில் இடம்பெறாது!

விழுப்புரத்தில் நாளை தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

திண்டிவனத்தில் பல்லவா் கால கொற்றவை சிற்பம் கண்டெடுப்பு

தமிழகத்தில் பால் குளிா்விக்கும் திறன் 32.16 லட்சம் லிட்டராக அதிகரிப்பு: அமைச்சா் மனோதங்கராஜ்

மரக்காணத்தில் ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து நெரிசல்

SCROLL FOR NEXT