படம்: X / MK Stalin
தமிழ்நாடு

நீதிக் கட்சியின் நீட்சியே திராவிட மாடல் ஆட்சி! முதல்வர் ஸ்டாலின்

நீதிக் கட்சி தொடங்கிய நாளில், முதல்வர் மு.க.ஸ்டாலினின் பதிவு...

இணையதளச் செய்திப் பிரிவு

நீதிக் கட்சியின் நீட்சியே நம் திராவிட மாடல் ஆட்சி எனத் தொடர்ந்து மெய்ப்பிப்போம் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

நீதிக் கட்சி தொடங்கிய நாளான இன்று, நம் உரிமைக்குரலின் உதயமான நாள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:

“நம் உரிமைக்குரலின் உதயம்! இந்த மண்ணின் மைந்தர்களுக்குக் கல்வி - வேலைவாய்ப்பு - அதிகாரத்தில் உரிய பங்கைப் பெற்றுத் தந்து, சமூகநீதியை நிலைநாட்டியே தீருவது என்ற பிராமணரல்லாதோர் அறிக்கையைச் செயல்படுத்திக் காட்ட, நம் தாய் அமைப்பான நீதிக்கட்சி தலைதூக்கிய நாள் இன்று.

நீதிக்கட்சியின் நீட்சியே நம் திராவிட மாடல் ஆட்சி எனத் தொடர்ந்து மெய்ப்பிப்போம்! சூழும் ஆரிய சூழ்ச்சிகளை எல்லாம் சுக்குநூறாக உடைத்தெறிவோம்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

CM MK Stalin message on Justice Party Foundation day

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சவரனுக்கு ரூ.800 குறைந்த தங்கம் விலை!

மசோதாவை கிடப்பில் போட ஆளுநருக்கு அதிகாரமில்லை! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

நெல் ஈரப்பதம் அதிகரிப்பு கோரிக்கையை நிராகரித்தது மத்திய அரசு!

ராணிப்பேட்டை அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் மூன்று பேர் பலி

இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு குறைவு! கீர்த்தி சுரேஷ்

SCROLL FOR NEXT