தமிழ் இலக்கிய எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் மூன்று பேருக்கு இலக்கிய மாமணி விருதை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை வழங்கினார்.
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், தமிழ் இலக்கியத்திற்கு வளம் சேர்க்கும் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் இலக்கிய மாமணி விருது வழங்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் 2024-ஆம் ஆண்டிற்கான இலக்கிய மாமணி விருதுகள் வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்வில், சென்னையைச் சேர்ந்த முனைவர் தெ. ஞானசுந்தரம் (மரபுத் தமிழ்), திருவாரூரைச் சேர்ந்த முனைவர் இரா. காமராசு (ஆய்வுத் தமிழ்) மற்றும் தென்காசியைச் சேர்ந்த க. சோமசுந்தரம் (எ) கலாப்ரியா (படைப்புத் தமிழ்) ஆகியோருக்கு விருதுகளை வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் கெளரவித்தார்.
விருதுடன் மூவருக்கும் தலா ரூ. 5 லட்சம் பரிசுத் தொகைக்கான காசோலையும் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.