மதுரை மெட்ரோ ரயில் திட்டம் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்படும் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர்ராஜு தெரிவித்துள்ளா.
இதுகுறித்து அவர் மதுரையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், திமுக 2026 தேர்தலை நாடகமாடி ஜெயிக்க வேண்டும் என்று நினைக்கின்றது. சதுரங்க வேட்டை பாணியில் மக்களை ஏமாற்றி திமுக ஆட்சிக்கு வந்துவிட்டது. மீண்டும் மக்களை திமுக ஏமாற்றக்கூடாது. மதுரையை வைத்து திமுக நாடகமாடக்கூடாது. மெட்ரோ ரயிலை மத்திய அரசு தடுத்து விட்டது என்று திமுகவினர் பரப்புகிறார்கள். இது திமுகவின் நாடகம். 2026 தேர்தலுக்காக திமுக அரசு மெட்ரோ குறித்து ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. ஆளுங்கட்சி நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் 2000 பேர் தான் கலந்திருக்கிறார்கள்.
மெட்ரோ வருவதற்கு திமுக அரசுக்கு விருப்பமில்லை. மெட்ரோ திட்டம் மதுரைக்கு கிடைக்க வேண்டும் என்று திமுக நினைத்தால் திட்ட அறிக்கையை முறையாக அனுப்பி இருக்க வேண்டும். மெட்ரோ ரயில் குறித்து மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 20 லட்சம் வாக்காளர்கள் மதுரையில் இருக்கிறார்கள் அந்த குறிப்பை மத்திய அரசுக்கு திமுக அரசு அனுப்பி இருக்க வேண்டும். இந்தத் திட்டம் வரக்கூடாது என்ற நோக்கத்தில் திமுக செய்துள்ளது. மதுரை மெட்ரோ ரயில் குறித்து திமுக செய்யாததை அதிமுக செய்யும்.
மதுரை மீனாட்சி சொக்கநாதர் அதிமுக ஆட்சியில்தான் வரும் என்று கடவுள் நினைக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி தான் மதுரை மெட்ரோ ரயிலை துவக்கி வைக்க வேண்டும், அதிமுக ஆட்சியில் தான் மதுரை மெட்ரோ ரயில் வரவேண்டும் என்று மதுரை மீனாட்சி சொக்கநாதர் விரும்புகிறார், மதுரை மக்களும் அதைத்தான் விரும்புகிறார்கள். திமுக மீண்டும் ஆட்சிக்கு வராது. வரலாறு மிகவும் முக்கியம். திமுக இரண்டு முறை ஆட்சியில் இருந்தது இல்லை. எம்ஜிஆர் காலத்தில் இருந்து இரண்டு முறை திமுக ஆட்சியில் இருந்தது இல்லை.
நான்கு ஆண்டுகளில் எந்தவிதமான திட்டங்களையும் மதுரை மக்களுக்கு திமுக கொண்டு வரவில்லை. மதுரை மக்களுக்கு நல்லதை செய்தது அதிமுகதான், எடப்பாடி பழனிசாமி எட்டாயிரம் கோடிக்கு மதுரையில் பணிகளை மேற்கொண்டார். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.