நெல்லை மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால், குறுக்குத்துறை முருகன் கோயிலில் சுற்றி தண்ணீர் செல்வதால் பொதுமக்கள் யாரும் ஆற்றில் இறங்கி குளிக்க வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக வடகிழக்குப் பருவ மழை பெய்து வருகிறது. நேற்று(நவ. 23) பெய்த கனமழை காரணமாக தாமிரவருணி ஆற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
இரண்டு கரையோரமும் தண்ணீர் அதிகமாக செல்வதால் பொதுமக்கள் யாரும் ஆற்றில் இறங்கி குளிக்கவோ கால்நடைகளை இறக்க வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தொடர்ந்து, மழை பெய்து வருவதால் அணைகளின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது. மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் தற்பொழுது 100 அடியை எட்ட உள்ளது.
இதேபோல், பாபநாசம் அணையின் நீர்மட்டம் 130 அடியும் தாண்டி உள்ளது. தொடர்ந்து, அணைக்கு தண்ணீர் வந்து கொண்டு இருப்பதால், ஆற்றில் மேலும் தண்ணீர் அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து, மழை பெய்து வருவதால் தாமிரவருணி ஆற்றில் வெள்ளம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கயத்தாறில் 79 மி.மீ. மழை: கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் சனிக்கிழமை காலை முதலே மழை பரவலாக விட்டு விட்டு பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. வானம் இருண்ட நிலையில் இருந்ததால் வாகனங்கள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி சென்றன. கோவில்பட்டியில் 18 மி.மீ., கழுகுமலையில் 16 மி.மீ., கயத்தாறில் 79 மி.மீ., கடம்பூரில் 49மி.மீ. மழை பதிவாகின.
தூத்துக்குடி மாவட்டம் மற்றும் தாமிரவருணி ஆற்றின் நீா்ப்பிடிப்பு பகுதிகளான திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் சனிக்கிழமை பிற்பகல் முதல் கனமழை பெய்து வருகிறது.
இதையும் படிக்க: கூத்தாடி கட்சியா? திமுகவுக்காக எம்ஜிஆர் வசனம் பேசிய விஜய்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.