தென்காசி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக குற்றால அருவிகளில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்தது. நேற்று இரவும் விடிய விடிய மழை பெய்த நிலையில் இன்றும் மழை பெய்து வருகிறது.
இதனால் தென் மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் நீர் தேங்கி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. திருச்செந்தூரில் கோயிலுக்குள் மழை நீர் புகுந்துள்ளது.
தூத்துக்குடியில் பல்வேறு பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல தேங்கியிருக்கிறது. அதிகபட்சமாக நெல்லை நாலுமுக்கு பகுதியில் 26 செமீ மழை பதிவாகியுள்ளது.
குற்றால அருவிகளில் குளிக்கத் தடை
தென்காசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் குற்றால அருவிகளில் நீர்வத்து அதிகரித்துள்ளது.
நேற்று பிற்பகலில் அருவிகளில் குளிக்க அனுமதிக்கப்பட்ட நிலையில் அதன்பின்னர் பெய்த கனமழை காரணமாக இன்று(ஞாயிற்றுக்கிழமை) சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் என அனைத்து அருவிகளிலும் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இன்றும் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.