நெல்லையில் கனமழை பாதிப்புகள் குறித்து தெரிவிக்க அவசர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
மழை பாதிப்பு தொடர்பான உதவிகளை பெற 1077, 0462-2501070, 9786566111 ஆகிய இலவச எண்களை அழைக்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக வடகிழக்குப் பருவ மழை பெய்து வருகிறது. இங்கு பெய்து வரும் கனமழை காரணமாக தாமிரவருணி ஆற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையின் இரண்டு அணியினர் தூத்துக்குடி மாவட்டத்திலும், ஒரு அணி திருநெல்வேலி மாவட்டத்திலும் மீட்பு மற்றும் நிவாரண பணிக்காக முன்னெச்சரிக்கையாக நிலை நிறுத்தப்பட்டுள்ளனர்.
நெல்லையில் மாநில அவசர கால செயல்பாட்டு மையம் மூலம் நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிக்க: நைஜீரியாவில் சிறைப்பிடிக்கப்பட்ட மாணவர்களில் 50 பேர் தப்பினர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.