தென் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என தனியார் வானிலை ஆய்வாளரான பிரதீப் ஜான் தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் இதுபற்றி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
"23.11.2025 முதல் 24.11.2025 காலை 8.30 மணி வரை வானிலை முன்னறிவிப்பு...
குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும்.
குமரி கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து மாவட்டங்களிலும் இடைவெளி விட்டு மழை பெய்யும்.
மத்திய, தெற்கு, மேற்கு, வடக்கு மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும். சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்யும்.
தூத்துக்குடி, ராமநாதபுரம், நெல்லை, தென்காசியில் சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நெல்லை மாவட்டத்தில் உள்ள மாஞ்சோலை மலைப்பகுதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.