சென்னையில் 2 நாள்களுக்கு மழை தொடரும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தகவல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,
"சென்னையில் ஒரு அற்புதமான பருவமழைக் காலம் தொடங்கியுள்ளது. அடுத்த 2 நாள்களுக்கு நாம் இதை அனுபவித்து மகிழலாம். அதன்பிறகு மழைக்கு ஒரு நீண்ட இடைவெளி இருக்கும். இன்று இரவு முதல் மழை அதிகரிக்கும், இன்று(ஜன. 24) இரவு முதல் நாளை(ஜன. 25) வரை நல்ல மழை இருக்கும்.
ஜன. 24 ஆம் தேதி - சென்னை முதல் டெல்டா வரை மிதமான மழை
ஜன. 25 ஆம் தேதி - சென்னை முதல் டெல்டா வரை பரவலான மழை
ஜன. 26 ஆம் தேதி - உள் மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகம்
கடலோர மாவட்டங்கள் மட்டுமல்லாமல், உள் மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களிலும் மழை பெய்யும்.
முக்கியப் பகுதிகள்: டெல்டா முதல் வட தமிழகம் முழுவதும் (நாகை, தஞ்சாவூர், திருவாரூர், காரைக்கால், பெரம்பலூர், அரியலூர்), கடலூர், புதுச்சேரி, விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை ஆகிய அனைத்துப் பகுதிகளிலும் மிக நல்ல மழை பெய்யும்.
கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் ஜனவரி மாத மழைப்பொழிவு மில்லிமீட்டரில்...
2026 - 25.8 (23.01.2026 வரை இயல்பைவிட அதிகம்)
2025 - 24.3 (இயல்பை விட அதிகம்)
2024 - 50.5 (மிகவும் அதிகம்)
2023 - 5.1 (இயல்பை விட குறைவு)
2022 - 34.8 (இயல்பை விட அதிகம்)
2021 - 139.3 (மிகவும் அதிகம்)
தமிழ்நாட்டிற்கான இயல்பான ஜனவரி மாத மழைப்பொழிவு - 12.3 மி.மீ." என்று பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.