பச்சிளம் சிசு 
தமிழ்நாடு

வேலூர் அரசு மருத்துவமனை கால்வாயில் வீசப்பட்ட பெண் குழந்தை சடலம்!

வேலூர் அரசு மருத்துவமனை கால்வாயில் பெண் குழந்தை சடலம் வீசப்பட்ட சம்பவம் பற்றி..

இணையதளச் செய்திப் பிரிவு

வேலூர் அரசு மருத்துவமனை அருகே பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் பெண் குழந்தை சடலம் கழிவுநீர் கால்வாயில் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

பிறந்த குழந்தை இறந்ததால் கால்வாயில் வீசப்பட்டதா? உயிரோடு கால்வாயில் வீசப்பட்டதா என்பது உடல் கூராய்வில் தெரிய வரும் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர் யார் என காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வேலூர் மாவட்டம், வேலூர் அரசு பென்ட்லேண்ட் உயர் சிகிச்சை மருத்துவமனை அருகே உள்ள கழிவுநீர் கால்வாயில் பிறந்த பெண் குழந்தை சடலமாக இருப்பதாக அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் வேலூர் தெற்கு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் கழிவுநீர் கால்வாயில் இருந்த பெண் பச்சிளம் குழந்தையின் உடலை மீட்டு உடல் கூராய்வுக்காக வேலூர் அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் கழிவு நீர் கால்வாயில் பெண் பச்சிளம் குழந்தையை வீசிச் சென்றது யார் என்று காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனால் மருத்துவமனை அருகே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் இரட்டை மாடி பேருந்துகள் இயக்க நடவடிக்கை

விதி மீறல்: 31 பட்டாசு ஆலைகளுக்கு குறிப்பாணை

பாலியல் வன்கொடுமை வழக்கில் தேடப்பட்டவா் 5 ஆண்டுகளுக்கு பிறகு கைது

ஹான்ஸ் பாக்கெட்டுகள் விற்றவா் கைது

வீட்டில் தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT