கோப்புப்படம் 
தமிழ்நாடு

நெல்லையில் அதி கனமழை: ஊத்தில் 232 மி.மீ, நாலுமுக்கில் 220 மி.மீ மழைப் பொழிவு!

நெல்லை மாவட்டத்தில் பெய்த அதி கனமழை தொடர்பாக...

இணையதளச் செய்திப் பிரிவு

கடந்த 24 மணி நேர முடிவில் திருநெல்வேலி மாவட்டத்தின் ஊத்து, நாலுமுக்கில் அதி கனமழை பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதையடுத்து, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் சனி, ஞாயிறு ஆகிய இரு நாள்களாக தொடா்ந்து கனமழை பெய்து வருகிறது.

அதன்படி, சனிக்கிழமை திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் காலை முதல் இரவு வரை பலத்த மழை பெய்தது. ஞாயிற்றுக்கிழமையும் பல இடங்களில் மழை நீடித்தது.

தொடர் மழையால் திருநெல்வேலி தாமிரவருணி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நாலுமுக்கு, ஊத்து, காக்காச்சி உள்ளிட்ட தேயிலைத் தோட்டப் பகுதிகளில் அதி கனமழை கொட்டித் தீர்த்தது.

இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் மழைப் பொழிவு விவரங்களை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

அதிகபட்சமாக ஊத்தில் 232 மி.மீ, நாலுமுக்கில் 220 மி.மீ, சேத்தியாதோப்பில் 210 மி.மீ, காக்காச்சியில் 210 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

மாஞ்சோலை, நாகப்பட்டினம், ஒரத்தநாடு பகுதிகளில் மிக கனமழை பதிவானது குறிப்பிரத்தக்கது.

Regarding the extremely heavy rains that fell in the Nellai district.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஏ.சி. திருலோகசந்தர் - நான் சந்தித்த பிரபலங்கள் - 33

மகாராஷ்டிர அமைச்சரின் உதவியாளர் கைது: காரணம் என்ன?

தென்காசி பேருந்து விபத்து: முதல்வர் மு.க. ஸ்டாலின் நிதியுதவி அறிவிப்பு!

பஞ்சபூதங்களின் கலவையே மண்பொம்மைகள்!

யான்சென் அபாரம், 201 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட்..! மீண்டும் தெ.ஆ. பேட்டிங்!

SCROLL FOR NEXT