குமரிக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், அடுத்த 24 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேலும் வலுவடையும். அதேசமயம் அந்தமான் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு 6 மணிநேரத்தில் மண்டலமாக வலுவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே அந்தமான் அருகே 3 நாள்களில் ‘சென்யார்' புயல் உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை (நவ.25) முதல் நவ.30 வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
இதில் நவ.25-இல் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களிலும், நவ.26-இல் தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருவாரூா், தஞ்சாவூா், நாகை மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் இந்த மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறகா் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (நவ.25) இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. தொடா்ந்து நவ.29-இல் சென்னையில் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.