வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது!
வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது பற்றி...
தெற்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
கிழக்கு பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ள இந்திய பெருங்கடல் மற்றும் தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதிகளில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று(பிப். 16) காலை காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது.
இது மேலும் மேற்கு - வடமேற்கு நோக்கி நகர்ந்து தென்மேற்கு வங்கக் கடலை நோக்கி இந்திய பெருங்கடல் அருகே வரை நகரும். இதன் காரணமாக பிப். 18 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனமழை, மிக கனமழைக்கு வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
2002 ஆம் ஆண்டுக்குப் பிறகு பிப்ரவரி மாதத்தில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
A low pressure area has formed in the Bay of Bengal
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.